Tuesday, January 20, 2009

513. ஒபாமா "கிறுக்கு" பிடித்த "மேல்தட்டு" இந்திய மீடியா

இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ள ஒபாமா பதவி ஏற்பு விழாவை இந்தியாவில உள்ள பல செய்திச் சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன். டிவி சேனல்களை ஸ்கேன் செய்து பார்த்ததில், சன் மியூசிக், SS மியூசிக் தவிர முக்கால்வாசி சேனல்களில் ஓபாமா புராணம் தான் ஓடுகிறது :) ஒபாமா இந்தியப் பிரதமர் ஆனாரா, அமெரிக்க ஜனாதிபதி ஆனாரா என்று சந்தேகமாக உள்ளது! ரொம்ப முடியல, அதனால் தான் டிவியை அணைச்சிட்டு இந்த பதிவெழுத உட்கார்ந்தேன்!

சரி ஒளிபரப்பட்டும், தவறொன்றும் இல்லை, அதுக்காக, இந்தியா ஏதோ அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கின ஒரு ராக்கெட் மூலம் ஒரு வெட்டு விளிம்பு (cutting edge) தொழில்நுட்ப செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கு முன் செய்யப்படும் count down க்கு இணையான ஒன்றைச் செய்து, நமது இந்திய டிவி மீடியா அடித்த கூத்து தாங்க முடியாத ஒன்றாக இருந்தது!

அமெரிக்கர்களும், அங்குள்ள மீடியாவும், ஒபாமாவைக் கொண்டாடுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அங்கு ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கிறதாக வைத்துக் கொள்ளலாம், ஒரு தேர்தல் மூலமாக.

இந்தியாவைப் பொருத்த அளவில், ஒபாமா இன்னொரு அமெரிக்க அதிபர், அவ்வளவு தான். அவரால், இந்தியாவுக்கு எந்தவிதமான பயனும் இல்லை, உதவியும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், ஆப்பு உண்டு என்று தெரிகிறது. ஏனெனில், அவரது outsourcing க்கு எதிரான நிலைப்பாடு நாம் அறிந்த ஒன்றே.

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இங்க ஒரு தலித் ஜனாதிபதியா / உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியா ஆனபோது கூட நம்ம மீடியால பெரிசா எழுதல, இப்ப ஏன் இப்டி ஒபாமா பைத்தியம் பிடிச்சு அலையறாங்க என்பது தான் முக்கியமான கேள்வி. அமெரிக்க ஜனாதிபதியும், இந்திய ஜனாதிபதியும் ஒரு தட்டில் வைத்துப் பார்க்க முடியாது தான். ஆனால், ஜனநாயகத்தில் ஒரு உயர்ந்த பதவிக்கு வருவதற்கு, ஒப்பீடு செய்யப்படும் இருவருமே சந்தித்த எதிர்ப்புகள், உழைத்த உழைப்பு, செய்த தியாகங்கள் என்று பார்த்தால், பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது என்கிறேன்!

அது போலவே, ஒரு பெண், ஒரு தலித் என்ற வகையில், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்திற்கு முதலமைச்சராக மாயாவதி தேர்தலில் வெற்றி பெற்று வந்தபோது, மீடியாவில் இப்போது காணப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு 10% கூட இல்லை என்பது உண்மை. இந்தியச் சூழலில், ஒரு தலித்தாக இருந்து கொண்டு, அனைவரையும் அரவணைத்து மாயாவதி பெற்ற வெற்றி மகத்தானது, அவர் சற்று சர்வாதிகாரத்தனமாக சில விசயங்கள் செய்தாலும் கூட!

பொதுவாக, மேல்தட்டு மனப்பான்மை மிக்க இந்தியச் சூழலில் மீடியாவும், அறிவுஜீவிகளும் ஒபாமா புராணம் பாடுவது அதீதமாக / போலியாக, ஏன் சற்று ஆபாசமாகக் கூடத் தெரிகிறது!!! இங்கு மேல்தட்டு எனும்போது உயர்சாதிகள் / ஓபிசியில் உள்ள சிலபல சாதிகள் என்று ஆதிக்க சாதிகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்! இப்படிப்பட்ட சூழலில், ஒரு தலித் அரசியலில் / சமூகத்தில் முன்னுக்கு வந்து வெற்றி பெறுவது தான் இந்தியர்களான நாம் கொண்டாட வேண்டிய ஒன்று. இந்த சமயத்தில் சரத் என்ற IIM ல் படித்த மாணவரைப் பற்றி நான் எழுதிய பதிவு ஞாபகத்துக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை!

எ.அ.பாலா

16 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Obama mania still ON :)

said...

mob mentality. shame on the intellectual vaccum in indian media

குடுகுடுப்பை said...

அது போலவே, ஒரு பெண், ஒரு தலித் என்ற வகையில், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்திற்கு முதலமைச்சராக மாயாவதி தேர்தலில் வெற்றி பெற்று வந்தபோது, மீடியாவில் இப்போது காணப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு 10% கூட இல்லை என்பது உண்மை. இந்தியச் சூழலில், ஒரு தலித்தாக இருந்து கொண்டு, அனைவரையும் அரவணைத்து மாயாவதி பெற்ற வெற்றி மகத்தானது, அவர் சற்று சர்வாதிகாரத்தனமாக சில விசயங்கள் செய்தாலும் கூட!//

இது ஒரு பெரிய சாதனை.ஆனால் மாயாவதி ஊழல் என்பார்கள் மத்தவர்கள் எல்லாம் பரிசுத்தம் போல

said...

முழு நகைகளையும் பறிகொடுத்து காதில் கம்மல் கூட இல்லாமல், ஒத்தை ரூபா மாத்திரம் ஊதியமாகப் பெற்று தமிழ்நாட்டை ஆண்டாரே மாதருள் மாணிக்கம் ஜெ. ஜெ அவரது பதவி ஏற்றதை அமெரிக்காவில் ஒளிபரப்பினார்களா? பொறுக்கி அமெரிக்க‌ன்ஸ்!


ராஜ‌ப‌க்ச‌விட‌ம் சில‌ கோடிக‌ளை வாங்கிக் கொண்டு இலங்கைக்கு ச‌ப்போர்ட் ப‌ண்ணும் அம்மாவின் அடுத்த‌ வெற்றி சிறில‌ங்கா தொலைக்காட்சியில‌ போடுவாங்க‌. சிலோன்காற‌ங்க‌ ந‌ன்றி கெட்ட‌வ‌ங்க‌ இல்லை.


புள்ளிராஜா

ரவி said...

கவுண்டமனி குரலில் படிக்க : நல்ல திங்கிங்.

இது பற்றி நானும் எரிச்சலடைந்து ஒரு பதிவு (எலக்ஷன் அப்பவே ) போட்டிருக்கேன்..

"அமெரிக்காவுக்குத்தானே தேர்தல் ? " என்று...

-/சுடலை மாடன்/- said...

//பொதுவாக, மேல்தட்டு மனப்பான்மை மிக்க இந்தியச் சூழலில் மீடியாவும், அறிவுஜீவிகளும் ஒபாமா புராணம் பாடுவது அதீதமாக / போலியாக, ஏன் சற்று ஆபாசமாகக் கூடத் தெரிகிறது!!! //

எனக்கும் இது ஆச்சரியம்தான்!! சன்னாசி கூட இதை அவருக்கேயுரிய அட்டகாசமான பாணியில் முன்பு சுட்டிக் காட்டினார்.

//உள்ளூரில் கருத்துரீதியான வலதுசாரியாக இருந்து ‘மைனாரிட்டியாவது மசுராவது, உடாதே மிதி அவனை’ சௌகரியப் பெரும்பான்மை (convenient majority) கோஷ்டிகள் இங்கே அமெரிக்கா வந்து அசௌகரியமான சிறுபான்மையானதும் (inconvenient minority) முக்காடு போட்டுக்கொண்டு ‘நான் லிபரல், என் ஓட்டு டெமாக்ரடிக் கட்சிக்கு’ என்று கூசாமல் சொல்வதை கணிசமாகப் (பல்கலைக்கழகச் சூழலிலாவது) பார்த்திருப்பதால், சப்போர்ட் ஒபாமா என்னும் அனைவரையும் சுதி சுத்தமான லிபரல்கள் என்று நான் நம்பத் தயாரில்லை//

நன்றி - சொ.சங்கரபாண்டி

Santhosh said...

தல,
யூடூ.. சேம் பிளட்... ஆமா இதே பதிவை ஒரு காப்பி எடுத்து இட்லி வடையில வேற போட்டு இருக்கீங்க :))..

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒபாமா பதவியேற்பு ஒன்று மட்டுமில்லை, இங்கே உள்ள மீடியாக்கள் செய்கிற அத்தனையும் கொஞ்சம் அல்ல நிறையவே டூ மச்.
கேக்கறவன் கேணப்பயலா இருந்தா கேப்பையில் நெய் வடியும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியுது. கேக்கறவனுக்கு எப்போ அது புரியப்போகுது?

அதெல்லாம் சரி, ஒரு தப்பை தப்புன்னு சொல்றீங்க சரி!
அதே மாதிரி ஒரு தப்பை localise பண்ணிச் செய்யச் சொல்றீங்களே அங்கே தான் கொஞ்சம் உதைக்குது.

கிருஷ்ண மூர்த்தி S said...

அப்படியே இந்த வலைப் பக்கத்தையும் பாத்துட்டு மனசை தேத்திக்கோங்க!
http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20090080495&ch=1/19/2009%2010:57:00%20AM
இதுல, ஒபாமாவை விட [அ]சத்யம் ராமலிங்க ராசுவைத்தான் கூகிள் ஆண்டவர் தயவுல அதிகம் பேர் தேடி இருக்காங்கன்னு சொல்றாங்க. சந்தோசம் தானே!

said...

எ.அ.பாலா எழுதியதை சொ.சங்கரபாண்டி சப்போர்ட் செய்து எழுதுகிறாரா, ஆச்சரியமாயிருக்கே.
என்னயய்யா நடக்குது இங்க.
ஒபாமாவை மலை போல் நம்பியிருக்கும் தமிழர்கள்
சார்பாக என் கண்டனங்களை
பதிவு செய்கிறேன்.
எங்கள் ஒபாமா -உலகின் புதிய நம்பிக்கை, அமெரிக்காவின் புரட்சித்
தலைவர்,இளையதலைமுறையின்
எழுச்சி கீதம்,நம்பிக்கையின் விடிவெள்ளி என்பதை புரிந்து
கொண்டு ஜோதியில் சேருங்கள்
என்று அன்புடன் அழைக்கிறோம்.
பொங்கும் மங்களம் எங்கும்
தங்குக.

enRenRum-anbudan.BALA said...

ஆதரித்து / எதிர்த்து கருத்து கூறிய நண்பர்களுக்கு நன்றி :)

ஒபாமா "வாய்ச்ச்சொல்லில் வீரர்" என்பதை சீக்கிரமே நிருபித்து விடுவார் என்று நினைக்கிறேன்.

-/சுடலை மாடன்/- said...

//எ.அ.பாலா எழுதியதை சொ.சங்கரபாண்டி சப்போர்ட் செய்து எழுதுகிறாரா, ஆச்சரியமாயிருக்கே.
என்னயய்யா நடக்குது இங்க.//

எ.அ.பாலாவுக்கு ஒபாமாவைப் பிடிக்காது என்பதே இப்பொழுதுதான் தெரியும் எனக்கு. ஒபாமாவைப் பற்றிய அவருடைய கருத்துக்களுக்காக நான் என்னுடைய முந்தையப் பின்னூட்டத்தை எழுதவில்லை. நான் சொல்ல வந்தது அவருடைய ஒரு கருத்தையொட்டியே. பெரும்பாலும் இந்தியப் பிரச்னையிலும், இலங்கைப் பிரச்னையிலும் இந்து-இந்தி-தேசிய வலதுசாரிகளாக மிளிரும் சிலர், அமெரிக்கா விசயத்தில் மட்டும் ஒபாமாவை ஓகோவெனத் தூக்கிக் கொண்டாடும் இடதுசாரி லிபரல்களாக மாறும் இரட்டைவேடத்தன்மையை வியந்துதான் பாலாவின் கருத்துக்கு ஒத்துப் போகும் என்னுடைய (+ சன்னாசியுடைய) முந்தைய கருத்தை வைத்தேன்.

ஒபாமாவுக்கான என்னுடைய ஆதரவைப் பற்றி ஏற்கனவே இங்கு விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

enRenRum-anbudan.BALA said...

அனானி,
//ஒபாமாவை மலை போல் நம்பியிருக்கும் தமிழர்கள்சார்பாக என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
//
இப்பதிவின் பேசுபொருள் ஒபாமா எதிர்ப்பு அல்ல. மேல்தட்டு மனப்பான்மை விரவிக் கிடக்கும் (போலியாக நாடகம் போடும்!) இந்திய மீடியாவுக்கு எதிராகவே இதை எழுதினேன். நன்றி.

சங்கரபாண்டி,
//எ.அ.பாலாவுக்கு ஒபாமாவைப் பிடிக்காது என்பதே இப்பொழுதுதான் தெரியும் எனக்கு.
//
பிடிக்காது என்பது பாயிண்ட் இல்லை. ஒபாமா vs ஹிலரி என்று பார்த்தபோது, முதல் அமெரிக்க பெண் அதிபராவதற்கு வேண்டிய அனுபவமும், திறமையும், தகுதியும் கொண்டவர் ஹிலரி என்பதால், என் ஆதரவு முதலிலிருந்தே ஹிலரிக்குத் தான்!

ஒபாமா நாமினேட் ஆனதற்கு அவரது rhetoric ஒரு முக்கியக் காரணம். திறமையான பேச்சாளர்! ஒபாமாவை நிறையவே தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினார்கள் என்பதும் உண்மை.


இராக், ஆப்கானிஸ்தான், பொருளாதாரம், தீவிரவாதம் சார்ந்த பிரச்சினைகளை ஒபாமா எப்படி அணுகுகிறார் / எத்தகைய முடிவுகளை எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே. அவரது HOPE & CHANGE மீது எனக்கு அத்தனை நம்பிக்கையில்லை, அவ்வளவு தான். நன்றி.

எ.அ.பாலா

வாழவந்தான் said...

அப்பாடா!! எப்டியோ கவுண்டு டவுனு முடிஞ்சிடிச்சி..
ஆனா ஒன்னு பாலா சார்..
அன்னிக்கு டிவில இதெல்லாம் பாத்துட்டு அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்றத்துக்கு இந்திய டிவி சேனல்கள் ஏண்டா இந்த கூவு கூவுராங்கனு நான் கேட்டதற்கு என் நண்பன் என்ன ஒரு புழுவ பார்ப்பதுபோல் பாத்துட்டு "இது ஒரு வரலாற்று நிகழ்வு" அப்படீனான்...

பின் ஏன் இந்த இந்திய தொல்லைக்கட்சிகள் லூதர் கிங் பேசினது, அம்பேத்கர் பதவி ஏற்ப்பு இதெல்லாம் தூசு தட்டி போடலையாம்..

பி.கு.. நீங்கள் குறிப்பிட்ட புட் கிங் இல் இருந்து தான் நான் முன்பு வேலை செய்த நிறுவனத்தில் மத்திய உணவு அளித்து வந்தார்கள். அதனால சரத் பற்றி நேரில் பார்த்து தெரிஞ்சுக்க முடிந்தது

said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

வாழவந்தான்,
வாசிப்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

//அப்பாடா!! எப்டியோ கவுண்டு டவுனு முடிஞ்சிடிச்சி..
ஆனா ஒன்னு பாலா சார்..
அன்னிக்கு டிவில இதெல்லாம் பாத்துட்டு அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்றத்துக்கு இந்திய டிவி சேனல்கள் ஏண்டா இந்த கூவு கூவுராங்கனு நான் கேட்டதற்கு என் நண்பன் என்ன ஒரு புழுவ பார்ப்பதுபோல் பாத்துட்டு "இது ஒரு வரலாற்று நிகழ்வு" அப்படீனான்...
//
ஒபாமாவை சப்போர்ட் பண்றது ஒரு Fashion, பல பேருக்கு. அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் முக்கால்வாசி நபர்கள் போலி லிபரல்கள் என்பது கண்கூடு!

"வரலாற்று நிகழ்வு" அமெரிக்கர்களுக்கு, நமக்கு இல்ல :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails